‘மானஸ சஞ்சரரே..’.. ‘கேஷூவலாக சென்ற வயதான நபர் செய்த விநோத காரியம்!’.. வேறலெவல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Mar 04, 2020 04:53 PM

ஆஸ்திரேலியாவில் சற்றே வயதான நபர் ஒருவர் மீன் பிடிக்கும் ஸ்டிக்கினை வைத்துக்கொண்டு ஒரு ஷாப்பில் இருந்து நெக்லஸை திருட முயற்சித்துள்ள சம்பவம் சிசிடிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Fishy Australian thief steals Versace necklace videoviral

ஆஸ்திரேலியாவின் மெர்ல்போர்ன் நகரில் நபர் ஒருவர் பார்ப்பதற்காக ஜெண்டில் மேன் போலதொரு நடை, உடையில் ஒரு ஷாப் பக்கமாக நடந்து செல்கிறார். தனது கையில் ஒரு மீன் பிடி ஸ்டிக்குடன் சென்ற அந்த நபர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

பின்னர் கேஷூவலாக நடந்து சென்று அந்த ஷாப்பினுள் மீன் பிடி ஸ்டிக்கினை விட்டுப் பார்க்கிறார். ஒத்து வராததால் வியூகத்தை மாற்றி ஸ்டிக்கினை விட்டுப் பார்க்கிறார். பின்னர் 700 டாலர் மதிப்புள்ள நெக்லஸை லாவகமாக லாவிக்கொள்கிறார். இதுவரை மட்டுமே சிசிடிவி கட்சிகளாக இணையத்தில் விடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபரை போலீஸார் துரத்திப் பிடித்துள்ளனர்.  ஓரளவு இரவு என்பதால் துணிச்சலாக இத்தகைய வெட்கப்பட வேண்டிய தகாத காரியத்தை

அந்த நபர் துணிச்சலாக செய்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ள நிலையில், இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Tags : #THIEF #VIDEOVIRAL