‘ஆத்தாடி.. என்ன கொஞ்ச நேரத்துல எல்லாம் மாறிடுச்சு?!’.. ஆச்சரியத்தில் உறைய வைக்கும் வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > கதைகள்மனிதர்கள் கண்முன்னே நிகழ்த்திக் காட்டும் பல அரிய கலைகள் இருக்கின்றன. அப்படித்தான் சமீபத்திய வீடியோ ஒன்றில், பிரம்மிக்க வைக்கும் ஒரு பிரம்மாண்டத்தை, ஆச்சரியத்தை செய்து பெண்கள் சிலர் வியக்க வைக்கின்றனர். அந்த வீடியோவை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதன்படி, இந்த வீடியோவில் உடல்முழுவதும் புலிபோல் வண்ணங்களைப் பூசி, புலிவேஷம் தரித்திருக்கும் 4 பெண்கள் ஒரு அரை லைட்டிங் மேடையில் ஒருவர் மீது ஒருவராக ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சாய்ந்து படுத்துக்கொள்கின்றனர். அப்படி படுத்துக்கொண்டதும், ஒரு வடிவம் புலப்படுகிறது.
ஆம், ஒரு பெரிய புலி, தனது நீண்ட வாலுடன் ஜம்பமாக உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு ஆச்சரியமான காட்சியினை இந்த 4 பேரும் உருவாக்குகின்றனர். அதாவது மனித உருவங்கள் ஒன்றாக சேர்ந்து அச்சு அசலான நிஜப் புலி ஒன்றின் தோற்றத்தை உருவாக்கும் மாயாஜாலமும் கலைத்துவமும்
When a man is creating he becomes god. pic.twitter.com/mLaJ5XBEry
— Raghava Lawrence (@offl_Lawrence) February 24, 2020
கலந்த இந்த வீடியோவை பார்த்தவர்கள் பகிராமல் இல்லை.
