“பாக்க தாண்டா மம்மி.. அடி ஒவ்வொன்னும் அம்மிடா!.. அயோக்கியப் பயலே!”.. பாட்டிம்மா செய்த தரமான சம்பவம்! வீடியோ!
முகப்பு > செய்திகள் > கதைகள்துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையன் ஒருவனை துடைப்பம் கொண்டு அடித்து விரட்டிய மூதாட்டியின் செயல் சிசிடிவி காட்சிகளில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
போலந்து நாட்டின் பிங்க்ஸ் என்கிற இடத்தில் பல்பொருள் அங்காடி வைத்திருந்துள்ளார் மூதாட்டி ஒருவர். அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக, கைத்துப்பாக்கிகளுடன் கொள்ளையன் ஒருவன் உள்நுழைந்து கடையை கொள்ளையடிக்க முயன்றதை மூதாட்டி கண்டுள்ளார். உடனே கொஞ்சம் கூட யோசிக்காத மூதாட்டி, தரையை சுத்தம் செய்ய வைத்திருந்த துடைப்பம் கொண்டு, கொள்ளையனை மொத்துகிறார்.
அப்போதும் கூட கொள்ளையன் பணத்தை எடுப்பதிலேயே குறியாக இருந்துள்ளான். ஆனால் பாட்டிம்மாவின் பலத்த அடி தாங்காத பலே திருடன், ‘ஆள விடுமா பாட்டி’ என்றபடி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags : #VIDEOVIRAL