‘உயிரே... தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு!’.. ‘ஆஹா எவ்ளோ ட்ரிக்ஸா மாட்டிவிட்டான்யா!’.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்அமெரிக்காவின் ஜியார்ஜியாவில் உள்ள Peachtree நகர போலீஸாருக்கு, அப்பகுதியில் திருடர்கள் புகுந்ததாக தகவல் வந்தது.

இதனை அடுத்து, விரைந்து வந்த போலீஸார், அந்தத் திருடர்களை பார்த்துவிட, துரத்திப் பிடிக்கத் தொடங்கினர். ஆனால் இரண்டு திருடர்கள் இருந்ததால், அவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம், ஓடி போலீஸாரை திசைத் திருப்ப முயற்சித்தனர்.
அப்போது, அங்கிருந்த பலசரக்குக் கடையில் இருந்து, பலசரக்குத் தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வந்த நபர் ஒருவர், அந்த தள்ளுவண்டியை அவ்வழியே ஓடிவந்த திருடனை நோக்கி தள்ளிவிட, திருடன் கீழே விழ, போலீஸார் அந்தத் திருடனை பிடித்துக்கொள்ள ஏதுவாக இருந்தது.
போலீஸாருக்கு உதவிய அந்த நபரை பாராட்டி,
அவருக்கு நன்றி சொன்ன போலீஸார், அதே சமயம், ‘போலீஸார் திருடனை துரத்திப் பிடிக்க முயற்சிக்கும்போது, யாரும் உதவி செய்யும் நோக்கில் கூட இடர்ப்பாடு செய்ய வேண்டாம்’ என்றும் கேட்டுக்கொண்டனர்.
