‘திருடுறதுக்கா வர...?’ ‘இந்தாப்பா இங்க வா, வந்து குளிச்சிட்டு போ...' 'இளம்பெண்ணின் யோசனையால் அலறி அடித்து ஓடிய திருடன்...' வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Mar 03, 2020 04:43 PM

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் திருட வந்த நபரை தண்ணீர் ஊற்றி திணறடித்து விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

The woman who threw water at the man who came to steal

கேட்டி கேமரேனா என்பவர் அமெரிக்காவின் தென் கலிஃபோர்னியாவை சேர்ந்தவர். கொஞ்ச நாட்களாக இவரது வீட்டின் வெளியே நிறுத்தப்படும் காரில் உள்ள பொருட்கள் திருடு போய் வந்துள்ளது. முதலில் இதனை கண்டும் காணாமல் விட்டுள்ளார். இந்த திருட்டு பற்றி கேட்டி தனது பக்கத்து வீட்டாரிடம் புலம்பியுள்ளார். அவர்களும் இதே பிரச்சனையை தாங்களும் பல காலமாக சந்தித்து வருவதாக கூறியுள்ளனர். திருட்டை தடுக்க கேட்டினும் அவரது பக்கத்து வீட்டு நண்பர்களும் ஒன்று சேர்ந்து யோசித்து வந்துள்ளனர். அதன் பின் இரு வீட்டாரும் தங்களின் வாசலில் ஒரு பெரிய விளக்கினை வைத்துள்ளனர். திருட வரும் நபர் அதனை துளி கூட சட்டை செய்யாமல் தனது திருட்டினை தொடர்ந்துள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த கேட்டி கேமரேனா இதற்கு ஒரு முடிவு கட்ட ‘Motion-activated Sprinkler' என்னும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த இயந்திரம் இருக்கும் இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஏதாவது அசைவு ஏற்பட்டால் உடனே அந்த இயந்திரத்திலிருந்து தண்ணீர் அடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

அடுத்த நாள் கேட்டி இதனை வாகனத்தில் பொருத்தி சி.சி.டி.வி கேமராவையும் மாட்டியுள்ளார். அன்றைக்கும் திருட வந்த நபர் காருக்கு அருகில் வந்ததும் தீடிரென்று தண்ணீர் வரவே பயந்து போய் தட்டு தடுமாறி தனது சைக்கிளில் ஒரே ஓட்டமாக ஓடியுள்ளார். இந்த சி.சி.டி.வி காட்சிகளை கேட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த இயந்திரத்தை கேட்டி அவரது பக்கத்து வீட்டாருக்கும் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது இந்த இயந்திரம் அமெரிக்காவில் ஒரு சிலரது வீட்டிலும் பொருத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு சிலர் தண்ணீருக்கு பதிலாக கருப்பு அல்லது சிவப்பு மையை பயன்படுத்துமாறும் யோசனை கூறி வருகின்றனர்.

 

Tags : #THIEF