‘ஜெயிச்சிட்டோம்.. ஜெயிச்சிட்டோம்!’.. கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மருத்துவர்கள்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Feb 26, 2020 12:36 PM

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் மருத்துவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் doctors dancing after corona patients cured

இந்த நூற்றாண்டின் கொடூர வைரஸாக தலைதூக்க தொடங்கியிருக்கும் கொரோனா வைரசை தெற்காசிய நாடுகள் முழுவதும் எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்நோய் தீவிரமாக இருக்கும் இடமான சீனாவில் பகலிரவு பாராமல் மருத்துவர்கள் இந்த நோயை விரட்டுவதற்காகவும், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களை நோயின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காகவும் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சீனாவில் சூஸோ நகரில் உள்ள

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த , கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 6 நோயாளிகள் குணமாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவதைக் கொண்டாடும் விதமாக இரண்டு மருத்துவர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பலரின் வரவேற்பையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது.

 

Tags : #CHINA #CORONAVIRUS #DOCTORS #VIDEOVIRAL