‘மினிஸ்டர கூட தெரிஞ்சு வெச்சுக்க மாட்டீங்களா?’.. ‘காவலருக்கு அமைச்சர் கொடுக்கச் சொன்ன தண்டனை!’.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 16, 2020 12:03 PM

பீகார் மாநிலம் சிவான் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

police man fails to recognise, minister asks for suspension

இதில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள்பாண்டே கலந்து கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், ஒவ்வொருவராக விழா நடைபெறும் இடத்திற்கு வரிசையாக செல்ல அனுமதித்து கொண்டிருந்தார். அதிலும் ஒருவர் போன பின்னேதான் மற்றொருவர் செல்லவேண்டும் என்பதில் அந்த காவலர் மிகவும் கவனமாகவும் கண்டிப்புடனும் இருந்துள்ளார். அப்போது நிகழ்வுக்கு தலைமை தாங்கி வந்த சுகாதார துறை அமைச்சர் மங்கள் பாண்டேவையும்,  ஒரு கணம் நிற்குமாறு அந்த காவலர் கையசைக்க முயற்சித்துள்ளார்.

சுதாரித்துக் கொண்ட மற்ற காவலர்கள் அந்த காவலரை

பின்னால் இழுத்து,  ‘அவர் தடுக்க முயன்றது சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டேவைத்தான்’ என்று அறிவுறுத்துகின்றனர். இதை கவனித்த மங்கள் பாண்டே, ‘ஒரு அமைச்சரை கூட தெரிந்து வைத்திராத இந்த காவலரை சஸ்பெண்ட் செய்யுங்கள்’ என்று அதிகாரிகளிடம் காட்டமாக கூறிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags : #POLICE #VIDEOVIRAL