‘என்னடா கொறளி வித்தையா இருக்கு?!’.. ‘கலைடாஸ்கோப் டான்ஸா இருக்குமோ?’.. வைரல் ஆகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 18, 2020 10:50 AM

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஒரு பிரபலமான முக்காலா.. முக்காபுலா பாடல். இந்த பாடலுக்கு சில இளைஞர்கள் ஆடும் வித்தியாசமான நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

youngsters dances for arrahman song goes viral on social media

இந்த பாடலுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இளைஞர்கள் ஆடும் கண்கவர் நடன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் சின்னபார் அண்டர்ஸ்கோர் டஸ்ட் என்கிற பெயரில் இருக்கும் கணக்கில் வெளியான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதிது புதிதாக இளைஞர்கள் தங்களுக்கு இருக்கும் திறமைகளை

தாங்களே வெளிப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும் சமூக ஊடகங்கள் வந்த பிறகு இவற்றுக்கான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த இளைஞர்களின் இந்த கண்ணை ஏமாற்றும் ஆச்சரிய நடனத்தை திரைத்துறை பிரபலங்கள் உட்பட பலரும் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.

 

Tags : #VIDEOVIRAL