‘யாரு சாமி இவன்?!’.. டிவி சேனல் நேரலையில் சிறுவன் செய்த ஆச்சரியமான காரியம்.. பரவும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Feb 16, 2020 11:39 AM

குடும்பத்தோடு டிவி சேனலுக்கு நேரலை பேட்டி அளித்துக் கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன்  செய்த அதிர்ச்சிக் காரியம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

australia kid eats flies in tv live show interview video viral

ஆஸ்திரேலியாவில் தாய், தந்தை மற்றும் தங்கையுடன் சிறுவன் ஒருவன் நேரலையில் டிவி சேனலின் முன்பாக நேரலையில் நின்றுகொண்டிருக்கிறான். சிறுவனின் தாய் தந்தையர் மும்முரமாக பேட்டி அளித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சிறுவனின் முகவாய்க் கட்டையின் அருகே ஈ வந்து உட்கார்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. சிறுவனோ, அந்த ஈ தன் முகவாயில் அமர்ந்ததை உணர்ந்து, அந்த ஈயை தன் நாக்கை நீட்டி ஈயை வாய்க்குள் இழுத்து சாப்பிடுகிறான்.

இதைவிட ஆச்சரியம் அடுத்து உட்கார்ந்த ஈயையும் இதேபோல்,

சாப்பிடுகிறான். இந்த சிறுவனின் செயலை பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள் விதவிதமாக கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

Tags : #AUSTRALIA #VIDEOVIRAL