‘45 வருஷ பாலம்!’.. 16 அடி கிரேனுடன் வந்து ‘சம்பவம்’ செய்த பிரம்ம்மாண்ட லாரி!.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Feb 17, 2020 07:13 PM

மலேசியாவில் கிரேன் ஒன்றை ஏற்றிவந்த பிரம்மாண்ட லாரி, சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழமையான பாலத்தை இடித்ததை அடுத்து, பாலத்தின் கூரை ஆட்டம் காண்பித்து சரியத் தொடங்கிய சம்பவம் வீடியோவாக வலம் வருகிறது.

mobile crane hit and damaged a pedestrian bridge Weld Quay

பினாங்கு பகுதியில் இருக்கும் வெல்ட் குவாய் என்ற இந்த பெடஸ்ட்ரியன் பாலம் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகாலமாக இடியாமல் நின்றுகொண்டிருந்த இந்த பாலத்தை அவ்வழியே 16 அடி உயரம் கொண்ட கிரேன் ஒன்று இடித்ததை அடுத்து, பாலம் மளமளவென இடியத் தொடங்கியது.

இதனைப் பார்த்ததும் லாரியின் பின்னால் வந்தவர்கள் சிலர் தத்தம் வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக

தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags : #VIDEOVIRAL #WELD QUAY #PEDESTRIAN BRIDGE