‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி’.. வேகமாக டேபிள் ஏறிக் குதிச்சு .. CISF வீரர் செய்த காரியம்.. குவியும் பாராட்டுக்கள்! வீடியோ

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 16, 2020 12:30 PM

நெஞ்சு வலியால் மயக்க நிலைக்குச் சென்ற பயணியை  CISF வீரர் ஒருவர் முதலுதவி செய்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

CISF personnel gives CPR and saved the life of a passenger video

கொல்கத்தா விமான நிலையத்தில் முடியாமல் அமர்ந்திருந்த ராய் சவுத்ரி என்கிற பயணிக்கு,  அங்கிருந்த  CISF வீரர்கள் வீல் சேரில் அமரவைத்து உதவி செய்ய முற்பட்டுக் கொண்டிருந்தனர். மற்ற பயணிகள் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீல் சேரில்  அமர்ந்திருந்த அந்த பயணி திடீரென மயக்க நிலை வந்து, தலையை சாய்த்துக்கொண்டார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த  CISF வீரர்கள் பதறியபடி உதவி செய்ய முயற்சித்தனர்.

அப்போது எங்கிருந்தோ வந்து வேகமாக டேபிளில் ஏறியெல்லாம் குதித்து பயணியின் அருகில் வந்த  CISF வீரர் பார்த்தா போஸ் என்பவர் பயணிக்கு, உடனடி முதலுதவியாக  CPR (cardio pulmonary resuscitation) எனப்படும் இருதய புத்துயிர்ப்பு முறையிலான உயிர்காக்கும் முதலுதவியை செய்தார். பின்னர் அந்த பயணி 

உயிர் பிழைத்ததை அடுத்து மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார். இதனை அடுத்து CISF வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

Tags : #KOLKOTA #VIDEOVIRAL