‘நட்சத்திர ஹோட்டல்.. நடிகையுடன் நாகினி நடனம்!’.. இந்திய வீரரின் வைரல் ஆகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Feb 26, 2020 07:34 AM

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல், நடிகையுடன் நாகினி டான்ஸ் ஆடும் வீடியோ 3 நாட்களைக் கடந்தும் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

chahal tiktok dance video goes trending instagram

நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் சாஹல், இந்தியா திரும்பினார். சக வீரர்களை பேட்டி எடுப்பது, நடனம் ஆடுவது என அணியை எப்போதும் உற்சாகத்துடன் வைத்திருக்கும் சாஹல் போட்டியின் நடுவே அவ்வப்போது சேட்டைகளை செய்து கலகலப்பான சூழலை உருவாக்குவார்.

இந்நிலையில் மைதானத்துக்கு வெளியேயும் அவரது இந்த உற்சாகம் மிகுந்த சுட்டித்தனம் குறையவே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் நடிகையும் மாடலுமான ரமீத் சாந்துடனும், அவரது தோழியுடனும் இணைந்து நாகினி டான்ஸ் போன்ற வகையில் நடனமாடியுள்ளார்.

மேலும் ரமீத் சாந்தின் நடனத்தை பார்த்ததும் தெறித்து

@rameetsandhuu

🔥 yuzvendrachahal elixirnahar14 #foryourpage #foryou #trending #dance

♬ AhiChallenge - elrodcontreras

ஓடுவதுமான சேட்டைகளை சாஹல் டிக்டாக் வீடியோக்களாக பதிவு செய்ய, அதை ரமீத் சாந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் 3 நாட்களுக்கும் மேலாக ட்ரெண்டிங்கில் உள்ளன.

 

Tags : #TIKTOK #VIDEOVIRAL #CHAHAL