‘அண்ணாத்த புடிச்சுக்கோ!’.. ‘மேட்ச்சில் நடந்த மேஜிக்கல் கேட்ச்’.. வைரல் ஆகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டு ப்ளிசிசும் டேவிட் மில்லரும் இணைந்து மிட்சல் மார்ஷ் அடித்த பந்தை அட்டகாசமாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2ஆவது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் களமிறங்கியபோது, லுங்கி நிகிடி வீசிய பந்தை எதிர்கொண்டார்.
அப்போது அந்த பந்தை பவுண்டரியை நோக்கி தூக்கி அடித்தார்.
Wowee! What a catch! #SAvAUS pic.twitter.com/3UPDKpNZuU
— Trishan Naidoo (@trishannai) February 23, 2020
வெகு உயரத்தில் எழும்பி எல்லைக்கோட்டைத் தாண்டி செல்ல முயன்ற பந்தை அங்கு நின்றிருந்த டு ப்ளிசிஸ் எகிறி அடித்து மைதானத்துக்குள் லாவகமாக தட்டிவிட, அங்கு நின்று கொண்டிருந்த டேவிட் மில்லர் அற்புதமாக கேட்ச் செய்தார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Tags : #VIDEOVIRAL #SAVAUS #DUPLESSIS #CRICKET
