‘இந்தா வந்துட்டான்ல.. என் செல்லம்.. அடுத்த சேலஞ்ஜோட!’.. ‘கத்தி மேல கூட நடந்துரலாம்.. ஆனா தண்ணி மேல?’.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சேலஞ்ஜ் ட்ரெண்ட் ஆகிவருவதைக் காண முடியும். அவ்வகையில் இப்போதுதான் ஸ்கல் பிரேக்கிங் சேலஞ்ஜ் என்கிற ஒன்று வைரலாகியது.

இதனை அடுத்து மேற்கண்ட இந்த சேலஞ்சை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று பல அரசுகளும் கேட்டுக்கொண்டதோடு, அதனைக் கட்டுப்படுத்த உத்தரவிட்டுள்ளன. ஆனால் மூச்சு விடுவதற்குள் அடுத்த சேலஞ்ஜ் வைரலாகி வருகிறது.
சீனாவில் இளைஞர் ஒருவர் தூரத்தில் இருந்து ஓடிவந்து, சற்றே உயரத்தில் ஸ்டூலில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாத்திரங்களின் மீது நடந்தபடி தாவுகிறார். பார்க்கும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இவரது சாகசம் இணையத்தில் வீடியோவாக பரவி வருகிறது.
ஆனால் ஸ்கல் பிரேக்கிங் அளவிற்கு,
Jumping Water Challenge: The Next Level pic.twitter.com/8fu9iG1wch
— People's Daily, China (@PDChina) February 17, 2020
இந்த சேலஞ்ச் அவ்வளவு ஆபத்தான சேலஞ்ச் இல்லைதான் என்றாலும், ஒருவரது உடல் திறனுக்கு சவால் விடுவதாகவே இந்த சேலஞ்ஜ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
