‘வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது!’.. ‘பயத்தை வெளிக் காட்டிக்காம நிக்குறாங்களாம்!’.. ஆனாலும் இவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்தான்! வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Feb 10, 2020 12:44 PM

தமிழ்நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டினை பார்த்திருப்போம். வீரர்கள் மாட்டின் பின்னால் ஓடி மாட்டைப்பிடித்து அடக்குவார்கள்.

men plays musical chair with a bull video goes viral

ஆனால் பேஸ்புக்கில் வலம் வரும் வீடியோ ஒன்றில்,  ஒரு மைதானத்தில் அமர்ந்திருப்பவர்களைம் நின்றுகொண்டிருப்பவர்களையும் ஓடி ஓடி முட்டித் தள்ளி ஆட்டத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆக்ரோஷம் குறையாத அந்த மாடு ஒவ்வொருவராக டார்கெட் செய்து துரத்திச் சென்று முட்டுகிறது. சிலர் மாடு முட்டுவதற்கு முன்னாலேயே எகிறிக் குதித்தும், சிலர் பிரசாதம் போல ஒரு முட்டினை வாங்கிக் கொண்டும் வெளியேறுகின்றனர்.

இடையில் யாரை டார்கெட் செய்வதென்றே மாடு குழம்பித் தவிக்கிறது. எனினும் கடைசிவரை

அந்த மைதானத்தில் ஒருவர் சும்மா கன் மாதிரி நிற்கிறார்.  இந்த வீடியோவைப் பார்த்த பலரும், இதுபோன்ற மிருகவதைகள் மனிதத் தன்மை அற்றது என்றும், சிலர் கடைசிவரை மைதானத்தில் நின்றுகொண்டிருந்தவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்தான் கொடுக்க வேண்டும் என்று புகழ்ந்தும் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

Tags : #VIDEOVIRAL #BULL