‘கிறிஸ்துமஸ்’ கொண்டாட்டம் முடிந்து ‘திரும்பும்’ வழியில்... இளைஞர்களுக்கு ‘நொடியில்’ நடந்த ‘பயங்கரம்’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 25, 2019 09:03 PM

கிறிஸ்துமஸ் விருந்தில் பங்கேற்றுவிட்டு காரில் வீடு திரும்பும்போது ஏற்பட்ட கோர விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

Dubai 2 Indian Students On Christmas Break Killed In Car Accident

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இளைஞர்களான ரோஹித் கிருஷ்ணகுமார் (19), சரத் குமார் (21) இருவரும் குடும்பத்தினருடன் துபாயில் வசித்து வந்துள்ளனர். அங்கு பள்ளிப் படிப்பை முடித்த இருவரும் கல்லூரிப் படிப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அவர்களில் ரோஹித் கிருஷ்ணகுமார் பிரிட்டன் நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்திலும், சரத் குமார் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்திலும் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையில் குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக சமீபத்தில் துபாய் வந்துள்ளனர்.

இதையடுத்து நேற்றிரவு அவர்கள் இருவரும் கிறிஸ்துமஸ் விருந்து ஒன்றிற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து காரில் வீடு திரும்பியபோது ஏற்பட்ட பயங்கர விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Tags : #ACCIDENT #DUBAI #STUDENTS