ரொம்ப நாள் ஆசை, லட்சியம்... தமிழ் விமானிக்கு கிடைத்த சான்ஸ்... சென்னை பயணிகளுக்கு இன்ப ஷாக்... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 25, 2019 07:43 PM

சென்னை - சிங்கப்பூர் விமானத்தில் தமிழ் விமானியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதும் இல்லாமல், அந்த விமானம் நிறுவனம் மட்டுமின்றி உலகத் தமிழர்களும் பெருமிதம் அடைந்துள்ளனர்.

viral video of tamil announcement in singapore scoot airline

சிங்கப்பூர் விமான நிறுவனமான ஸ்கூட்டில் பணிபுரிந்து வருகிறார் தமிழரான விமானி சரவணன் அய்யாவு. இவருக்கு வெகுநாட்களாக தமிழில் பயணிகளுக்கு அறிவிப்புகளை வழங்க வேண்டும் என்ற ஆசையும், லட்சியமும் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் திடீரென வழங்கப்பட்ட அறிவிப்பு தான் தற்போது வைரல் ஆகியுள்ளது.

பொதுவாக ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்புகள் வழங்கப்படும் நிலையில், தேன் நிறைந்த அழகான குரலால் தமிழ் அறிவிப்பு வழங்கப்பட்டதால், பயணிகள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர். அந்த அறிவிப்பில், சென்னை மற்றும் சிங்கப்பூரின் வானிலை எவ்வாறு உள்ளது? எவ்வளவு அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கின்றோம்? போன்வற்றை தமிழில் அறிவித்து, இதனை வீடியோவாக எடுத்து தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.

அதில், ‘எனக்கு சிறிய லட்சியம் ஒன்று இருந்தது. அதாவது, விமானத்தில் ஆங்கிலத்தைத் தொடர்ந்து தமிழில் அறிவிப்புச் செய்வது. அதற்கு அனுமதி கொடுத்த விமானத்தின் கேப்டன் மற்றும் எனக்கு உதவிய கேபின் குழுவினருக்கு நன்றி’ என்று சரவணன் அய்யாவு குறிப்பிட்டுள்ளார். விமானம் தரையிறங்கும் முன்னர் நேரம், பருவநிலை குறித்து பயணிகளுக்கு விமானிகள் அறிவிப்பர். இந்த அறிவிப்பை அவ்வப்போது 4 மொழிகளிலும் முன்பதிவு செய்வது சிரமம்.

ஆனால் விமானி சரவணன் தமிழ்ப் படைப்பாளராக அனுபவம் இருந்ததால், தமிழில் அறிவிக்கும் அவருடைய கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழ் அறிவிப்புக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #CHENNAI #SCOOT #AIRLINE #YOUTH