‘திடீரென’ கேட்ட காதைக் ‘கிழிக்கும்’ வெடி சத்தம்... ‘அதிர்ந்த’ கட்டிடங்கள்... ‘லைட்டரால்’ நொடிப்பொழுதில் நடந்த பயங்கர விபத்து...
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Dec 17, 2019 07:00 PM
இங்கிலாந்தில் ஏர் ஃப்ரெஷனரை ஸ்பிரே செய்துவிட்டு ஒருவர் காரில் புகைபிடிக்க லைட்டரைப் பற்ற வைத்தபோது கார் திடீரென தீப்பிடித்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரில் வாசனைக்காக ஏர் ஃப்ரெஷனரை ஸ்பிரே செய்துள்ளார். ஆனால் வழக்கத்தை விட அதிகமாக ஏர் ஃப்ரெஷனரை ஸ்பிரே செய்த அவர் பின் காரில் அமர்ந்துகொண்டே புகை பிடிப்பதற்காக சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு லைட்டரைப் பற்ற வைத்துள்ளார். அடுத்த நொடி எதிர்பாராத விதமாக கார் தீப்பிடித்து வெடித்துள்ளது.
இந்த விபத்து குறித்துப் பேசியுள்ள அருகிலிருந்தவர்கள், “விபத்து நடந்த போது ஏதோ வெடிகுண்டு வெடித்ததைப் போல காதைக் கிழிக்கும் அளவிற்கு சத்தம் கேட்டது. காரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் அருகிலிருந்த சில கட்டிடங்களும் இந்த விபத்தால் அதிர்ந்தன” எனக் கூறியுள்ளனர். இந்த பயங்கர விபத்தில் அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்த நபர் பெரிய காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.