VIDEO: ‘சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஸ்டுடண்ட்ஸ்’!.. ‘கண்கலங்கிய டீச்சர்’!.. அப்படி என்ன கொடுத்தாங்க தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Dec 22, 2019 02:14 PM
மாணவர்கள் கொடுத்த பரிசை கண்டு ஆசிரியர் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்த வகுப்பறைக்குள் நுழைகிறார். அப்போது மாணவர் ஒருவர் சிறிய பரிசு பெட்டி ஒன்றை ஆசிரியரிடம் கொடுக்கிறார். அதை வாங்கிய ஆசிரியர் ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் நிற்கிறார். ஒருவேளை மாணவர்கள் நம்மை ஏமாற்ற ஏதாவது உள்ளே வைத்துள்ளார்களான என பெட்டியை திறக்காமல் நிற்கிறார்.
அப்போது இந்த பெட்டிக்குள் பாம்பு இருக்கிறதா என விளையாட்டாக கேட்கிறார். அந்த சமயம் மாணவர் ஒருவர் கத்தரிக்கோலை ஆசிரியரிடம் கொடுத்து பெட்டியை திறக்க உதவுகிறார். ஆசிரியர் அந்த பெட்டியை மெதுவாக திறந்து பார்த்தபோது உள்ளே அழகான இரண்டு ஷூக்கள் இருந்துள்ளது. மாணவர்கள் கொடுத்த இந்த பரிசால் ஆசிரியர் மகிழ்ச்சியில் உறைந்துபோனர். மாணவர்களின் இந்த அன்பைக் கண்டு ஆசிரியர் ஆனந்த கண்ணீர் வடித்தார். இவர் மாணவர்களுக்கு பாடம் எடுக்க 5 மைல் தூரம் நடந்தே பள்ளிக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதோடு அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.
