‘அடுத்தடுத்து’ மோதிக் கொண்ட ‘69 வாகனங்கள்’... ‘நொடிகளில்’ நடந்து முடிந்த கோர விபத்து... ‘பதறவைக்கும்’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Dec 24, 2019 08:28 PM
அமெரிக்காவில் அடுத்தடுத்து 69 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியுள்ளது. முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு இருந்த கடும் பனிமூட்டத்தால் சில நொடிகளில் அந்த வழியாக சென்ற 69 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தை தொடர்ந்து நெடுஞ்சாலை உடனடியாக மூடப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் உடனடியாக வாகனங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Tags : #ACCIDENT #US #CAR #COLLISION
