‘தனியாக வசித்த’... ‘ரிட்டையர்டு ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 07, 2019 12:59 PM

ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரை கொடூரமாக கொலை செய்த மர்மநபர்கள், மின்சாரம் தாக்கி இறந்ததுபோல் மாற்றும் வகையில், இவரது உடலையும் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

woman teacher murdered and steals money from her house

ஆரணி அருகே முனியந்தாங்கல் கூட் ரோட்டில், பண்ணை வீட்டில் வசித்து வந்தவர் லூர்து மேரி (65). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இவரது கூடப் பிறந்தவர்கள், வெளியூரிலும், வெளிநாட்டிலும் வசிப்பதால், தனியாக வசித்து வந்த இவருக்கு, பாதுகாப்புக்கு என்று நாய் ஒன்றை மட்டும் வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலை, அவரைக் காண உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பூட்டப்படாத கதவை திறந்து பார்த்தபோது, லூர்துமேரி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் அவர் வீட்டில் இருந்த நாயும் இறந்து கிடந்தது. இதையடுத்து, சந்தேகமடைந்த உறவினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் அங்கு வந்த போலீசார், லூர்துமேரியின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், லூர்து மேரி எப்போதும் தனியாக இருப்பதை நோட்டமிட்டு, கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவில், அவரின் வீட்டிற்குள் நுழைய முயன்ற கொள்ளையர்கள், நாய் குரைத்ததால் அதனை கொன்றுவிட்டு வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

பின்னர், பீரோவில் இருந்து நகை, பணத்தை எடுத்தப்போது, லூர்து மேரி தடுத்ததால், அவரது தலையை பிடித்து, சுவற்றில் கொடூரமான முறையில், அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதன்பிறகு வீட்டில் இருந்த நகைப் பணத்தை எடுத்துச் சென்ற மர்மநபர்கள், கொலையை மறைக்க, லூர்துமேரியின் உடல் அருகில் மின்வயரை வைத்து, மின்சாரம் தாக்கி இறந்ததுபோல் வைத்துவிட்டு சென்றதும் கண்டறியப்பட்டது. அந்தப் பகுதியில் மிகவும் அன்பாக காணப்பட்ட ஆசிரியை லூர்து மேரியை, கொலை செய்த மர்மநபர்களை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : #MURDER #TEACHER #RETIRED #ARANI #DOG