‘13 வயது சிறுமி கொலையில்’... ‘அத்தை மகன் அளித்த’... 'அதிர்ச்சி வாக்குமூலம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 01, 2019 04:37 PM

சென்னையில் 13 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த விவகாரத்தில், அத்தை மகன் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 year old girl died case, aunty\'s son arrested in chennai

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வேதவல்லி (50). கணவர் இல்லாதநிலையில், தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இவரின் மூத்த மகன் பாபு (26) திருமணமாகி, தனது குடும்பத்துடன் அயனாவரத்தில் வசித்து வருகிறார். 2-வது மகன் மாதவன், தனது தாயார் வேதவல்லியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வேதவல்லியின் தம்பி பூபதி மற்றும் அவருடைய மனைவியும், உடல்நிலை காரணமாக இறந்துவிட்டனர்.

அவர்களின் மூத்த மகள் திருமணமாகி சென்றுவிட்டநிலையில், தனியாக இருந்த 2-வது மகளான ஷோபனாவை (13), அத்தை வேதவல்லி வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 29-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமி ஷோபனா, கத்தியால் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வேதவல்லியின் மூத்த மகன் பாபு, வீட்டுக்கு வந்து சென்றதும், சிறுமி கொலைக்கு பிறகு அவர் தலைமறைவானதும் தெரிந்தது.

இதையடுத்து, அயனாவரத்தில் பதுங்கி இருந்த பாபுவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தனது தாய்மாமன் மகள் ஷோபனாவை கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் அளித்த வாக்மூலத்தில், ‘தனது தாய் வேதவல்லி, தன்னுடைய குழந்தைகளைவிட, தனது தம்பி மகளான ஷோபனா மீதுதான் அதிக பாசத்துடன் இருந்தார். தற்போது தன் தாய் வசிக்கும் வீட்டை விற்று பணம் தரும்படி கேட்டதற்கு மறுப்பு தெரிவித்தார்.

மேலும் அந்த வீடு, ஷோபனாவின் பெற்றோருக்கு சொந்தமானது என்பதால், அந்த வீட்டையும், பணத்தையும், ஷோபனாவுக்கு எனது தாய் கொடுத்து விடுவார் என்று நினைத்து அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாசமும் இல்லை, சொத்தும் கிடைக்காது என்பதால், வீட்டில் தனியாக இருந்த ஷோபனாவை தாக்கி, பிளேடு மற்றும் கத்தியால் குத்திக்கொலை செய்து கொன்றாக’ வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான பாபுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #MURDER #CHENNAI #AYANAVARAM #COUSIN #UNCLE #DAUGHTER #AUNTY #SON