‘தனியாக இருக்கிறேன் என அழைத்ததை’.. ‘நம்பிச் சென்ற இளைஞருக்கு’.. ‘காதலியால் நடந்த கொடூரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 05, 2019 05:31 PM

உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் காதலி மற்றும் அவருடைய குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP Law Student Killed By Girlfriend And Her Family

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள கிரிதர் காலனி பகுதியில் பங்கஜ் சிங் (29) என்பவர் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நான்காம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வந்த பங்கஜ் இணைய மையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இணைய மையம் தொடர்பாக பங்கஜுக்கும் அவருடைய வீட்டு உரிமையாளர் முன்னாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறால், சமீபத்தில் அவர் அதே பகுதியில் உள்ள வேறு ஒரு வீட்டில் குடியேறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி பங்கஜைக் காணவில்லை என அவருடைய சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவலர்களுக்கு பங்கஜுடைய வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம் வந்து அவரிடம் விசாரித்துள்ளனர். விசாரணைக்கு பின் முன்னாவும், அவருடைய குடும்பத்தினரும் தலைமறைவாக போலீஸாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதையடுத்து கடந்த மாதம் முன்னாவின் வீட்டில் நடந்தப்பட்ட சோதனையில், வீட்டின் பின் பகுதியில் இருந்த ஒரு குழியில் இருந்து பங்கஜின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தலைமறைவான முன்னா மற்றும் அவருடைய குடும்பத்தினரை தீவிரமாக தேடிவந்த காவலர்கள் நேற்று முன்தினம் ஒரு ரயில் நிலையத்திலிருந்த அவர்களை கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாவின் வீட்டில் குடியிருந்தபோது பங்கஜும் அவருடைய மூத்த மகள் அங்கிதாவும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.  அப்போது தன்னுடனேயே இருக்கும்படி பங்கஜ் அங்கிதாவை வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு அவர் மறுத்துவர, இந்த விவகாரம் முன்னாவிற்கு தெரியவந்துள்ளது.

பின்னர் பங்கஜைக் கொலை செய்ய முடிவு செய்த முன்னா மகள் அங்கிதாவையும் மூளைச் சலவை செய்து அதற்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி பங்கஜுக்கு ஃபோன் செய்த அங்கிதா, “என் வீட்டில் இல்லை. நீ வீட்டுக்கு வா” என அழைத்துள்ளார். அதை நம்பி பங்கஜும் வீட்டிற்கு வர, அங்கிதா அவரை வீட்டிற்கு பின்னால் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குளியலறையில் மறைந்திருந்த அவருடைய குடும்பத்தினர் பங்கஜை பின்னால் இருந்து தாக்கியுள்ளனர். பின் அவருடைய இரண்டு கைகளையும் கட்டிக் கொடூரமாகக் கொலை செய்து, ஏற்கெனவே தோண்டி வைத்திருந்த குழியில் தள்ளி புதைத்துள்ளனர். காதலி மற்றும் அவருடைய குடும்பத்தினரால் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UTTARPRADESH #GHAZIABAD #MAN #CALL #FAMILY #FATHER #MURDER #LAW #STUDENT #LOVE #GIRLFRIEND