‘மனைவியின் தகாத உறவால்’.. ‘கணவர் எடுத்த விபரீத முடிவு’.. ‘மகள்களுக்கு நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 01, 2019 12:45 PM

மனைவியின் திருமணத்தை மீறிய தகாத உறவால் கணவர் தனது 2 குழந்தைகளோடு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Madurai Husband Commits Suicide With Daughters Over Wifes Affair

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மனைவி கீதா, மகள்கள் ஹேமலதா (7), பிரதீபா (6). இந்நிலையில் நேற்று கருப்பையாவின் டீ கடையில் சிலிண்டர் வெடித்து அவரும், அவருடைய மகள் பிரதீபாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீஸார் படுகாயமடைந்திருந்த கருப்பையாவின் மற்றொரு மகள் ஹேமலதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கருப்பையாவின் மனைவி கீதாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை மீறிய தகாத உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த கருப்பையா 4 நாட்களுக்கு முன் கீதாவிடம் இதுபற்றிக் கேட்டுள்ளார். அப்போது அவருடன் தகராறில் ஈடுபட்ட கீதா தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதன்காரணமாக மன உளைச்சலில் இருந்த கருப்பையா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். தனக்குப் பிறகு தன் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என பயந்த அவர் குழந்தைகளையும் மதியமே பள்ளியில் இருந்து அழைத்து வந்துள்ளார். பின்னர் கடையில் இருந்த சிலிண்டர்களை திறந்துவிட்டு தீயைப் பற்ற வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மனைவியின் தகாத உறவால் கணவர் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #MADURAI #HUSBAND #WIFE #AFFAIR #DAUGHTERS #SUICIDE #MURDER #GAS #EXPLOSION