‘தற்கொலை என நினைத்தபோது’.. ‘இறுதிச்சடங்கில் 7 வயது மகள் கூறியதைக் கேட்டு’.. ‘அதிர்ந்துபோன குடும்பத்தினர்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 31, 2019 01:41 PM

மகளைக் கொன்ற மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Army Jawans Daughter Reveals that Father Killed Her Mother

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவருடைய மனைவி ரேணுகா, மகள்கள் யோகிஸ்ரீ (7), தன்யாஸ்ரீ (1). இவர்கள் குஜராத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி ரேணுகாவின் தந்தைக்கு அவர் சிலிண்டர் வெடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அலுவலகத்திலிருந்து ஃபோன் வந்துள்ளது.

உடனடியாக குஜராத் சென்ற ரேணுகாவின் குடும்பத்தினர் அங்கு விசாரித்தபோது அவர் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ரேணுகாவின் உடலுடன் குடும்பத்தினர் ஊருக்குத் திரும்பியுள்ளனர். பின்னர் இறுதிச்சடங்கின்போது தன் தாய் ரேணுகாவை தந்தை தான் தீவைத்து கொளுத்தியதாக யோகிஸ்ரீ உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ந்துபோன ரேணுகாவின் தந்தையும், உறவினர்களும் உடனடியாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். நாகேந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் இருந்த தகாத உறவைக் கண்டித்ததாலேயே ரேணுகா கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags : #THIRUVANNAMALAI #GUJARAT #ARMY #JAWAN #HUSBAND #WIFE #AFFAIR #SUICIDE #MURDER #FIRE #DAUGHTER #FUNERAL