‘மாணவியின் மர்ம மரணத்தில் புதிய திருப்பம்’.. ‘உடலிலும், ஆடையிலும் ஆணின் டிஎன்ஏ கண்டுபிடிப்பு’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Oct 31, 2019 10:08 PM

பாகிஸ்தானில் மர்மமான முறையில்  உயிரிழந்த இந்து மருத்துவ மாணவியின் உடலிலும், ஆடையிலும் ஆணின் டிஎன்ஏ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Male DNA found on dead Pak Hindu girls body and clothes

பாகிஸ்தான் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் கடைசி ஆண்டு படித்துவந்த நிம்ரிதா என்ற மாணவி கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அவருடைய விடுதி அறையிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கல்லூரி நிர்வாகம் அவருடைய மரணத்தை தற்கொலை எனக் கூறிய நிலையில், ஆரம்பகட்ட பிரேதப் பரிசோதனை முடிவுகளும் அதை தற்கொலை என்றே குறிப்பிட்டன.

தொடக்கம் முதலே நிம்ரிதாவின் சகோதரரும், மருத்துவருமான விஷால் இதைக் கொலை எனக் கூறிவந்த நிலையில், இதுகுறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவருடைய குடும்பத்தினர் கோரினர். இதைத்தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார், நிம்ரிதாவின் வகுப்புத் தோழர்கள் 2 பேரைக் கைது செய்தனர். அதில் மெஹ்ரான் அப்ரோ என்பவரை நிம்ரிதா திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், ஆனால் அவர் அதற்கு தயாராக இருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நிம்ரிதாவின் டிஎன்ஏ மாதிரிகளை தடவியல் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அவருடைய உடல் மற்றும் ஆடையில் ஆணின் டிஎன்ஏ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள போலீஸார், “நிம்ரிதாவின் டிஎன்ஏ அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அதை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்” எனக் கூறியுள்ளனர்.

Tags : #PAKISTAN #HINDU #GIRL #MEDICAL #STUDENT #HOSTEL #MURDER #SUICIDE #MALE #DNA