'மனைவிகிட்ட சொல்லிட்டுதான் போனார்!'.. சாதிமறுப்புத் திருமணம் செய்த 3 மாதத்தில்.. சென்னையில் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 05, 2019 05:46 PM

சென்னையில் 3 மாதங்களுக்கு முன்பு சாதிமறுப்புத் திருமண செய்துகொண்ட நபர் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

newly married chennai youth murdered by unknown gang

சென்னை பெரும்பாக்கம் - காரப்பாக்கம் எட்டடுக்கு பகுதியை சேர்ந்தவர் முரளி.  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், டீக்கடையில் நின்று டீ அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதில் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். இதனையறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் முரளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரித்ததில், பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த முரளி கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக, கௌசல்யா என்கிற வேறு சாதிப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டிருந்தது தெரியவந்தது.

இதனால் இந்த படுகொலைச் சம்பவம் திட்டமிட்ட ஆணவப் படுகொலையா? என்கிற கோணத்திலும் கண்ணகி நகர் போலீஸார் விசாரித்தபோது, இருவீட்டாரும் ஆரம்பத்தில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் இருவீட்டாரும் இவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொண்டு இணக்கமாக இருந்ததாகவும், மனைவியுடனும் எவ்வித சண்டையும் இல்லாமல் இயல்பாக,  ‘வேலைக்கு சென்று வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுதான் முரளி வந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் இது ஆணவப்படுகொலையா என்பதெல்லாம் கொலையாளி கிடைத்தால்தான் உறுதியாகக் கூற முடியும் என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : #MURDER #CHENNAI #YOUTH