'டியூஷனுக்கு வரும் மாணவிகளுக்கு தனி அறை'.. 'வீடியோ எடுத்து மிரட்டி'.. ஆண் நண்பருடன் சேர்ந்து ஆசிரியை செய்த 'அதிரவைக்கும் சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 06, 2019 04:06 PM
சென்னை தி.நகரில், சஞ்சனா என்பவர் 10,11,12-ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வந்துள்ளார்.

இவருடன் சேர்ந்து இவரது நண்பர் பாலாஜி என்பவரும் டியூஷனுக்கு வரும் மாணவிகளை தனி அறையில் வைத்து தகாத முறையில் வீடியோ எடுத்ததாக, இவர்களிடம் இருந்து தப்பித்து வந்த மாணவி ஒருவர் சென்னை தி.நகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் சஞ்சனாவையும், பாலாஜியையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இருவரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதோடு, செல்போன்களில் இருந்த வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த வீடியோக்களை வைத்து மாணவிகளை மிரட்டி பணம் பறித்ததாகவும், பாலியல் வன்கொடுமைகளை செய்ததாகவும் சஞ்சனாவின் நண்பர் பாலாஜி தன் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சியில் இப்படியானதொரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
