‘அப்பா திட்டினார்..!’ செல்ல நாய்க்காக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! கோவையை அதிர வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Nov 01, 2019 02:12 PM
நாய் வளர்த்தற்காக தந்தை திட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கவுண்டபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் கவுதா (23). இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பத்திர அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவிதா மின்விசியில் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கவிதா சீசர் என பெயரிட்ட நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இடியுடன் கூடிய மழை பெய்ததால், நாய் பயத்தில் குறைத்துக்கொண்டே இருந்துள்ளது. இது அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையூராக இருப்பதாக புகார் வந்துள்ளது. இதனால் கவிதாவை அவரது தந்தை திட்டிவிட்டு நாயை எங்கேயாவது கொண்டு விடுவது என முடிவெடுத்தாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த கவுதா கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கவிதா எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில் ‘அப்பா, அம்மா, பாட்டி, தம்பி ஆகியோருக்கு, நான் செல்லமாக வளர்த்த சீசரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். வாராவாரம் கோயிலுக்கு போக வேண்டும். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்’ என இருந்த போலீசார் தெரிவித்துள்ளனர். கவிதா உயிரிழந்தபின் அவர் வளர்த்த நாய் உணவு உண்ண மறுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளம்பெண் கவிதா தற்கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய் வளர்த்தற்காக அப்பா திட்டியதால் மனமுடைந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.