‘வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி’... 'அத்தை மகனால் நேர்ந்த பரிதாபம்'... 'நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 30, 2019 12:43 PM

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை, அவரது அத்தை மகனே கொடூரமாக கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

youth killed his uncle\'s daughter due to property in chennai

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் வேதவல்லி (50). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக இருந்து வரும் இவர், கணவரை இழந்த நிலையில், மூத்த மகன் பாபு (26) திருமணம் ஆகி தனியாக சென்றுவிட, இளைய மகன் மாதவனுடன் வசித்துவந்தார். இந்நிலையில் வேதவல்லியின் சகோதரர் பூபதி மற்றும் அவரது மனைவியும் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். அவர்களின் மூத்த மகளான மோனிஷா, திருமணம் ஆகி சின்னமலையில் வசித்து வருகிறார்.

இதனால் இளைய மகளான ஷேபானாவை (13), அத்தையான வேதவல்லி, தனது வீட்டிற்கு கூட்டி வந்து வளர்த்து வந்துள்ளார். சிறுமி ஷேபானாவிற்கு உடல்நலம் பாதித்ததால், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, வீட்டிலேயே இருந்துள்ளார். இதற்கிடையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று காலை 11 மணியளவில், தனது அத்தை வீட்டில் உள்ள தங்கையை பார்க்க, அக்கா மோனிஷா வந்துள்ளார். அப்போது  வீடு திறந்துகிடந்தநிலையில், தனது தங்கை மோனிஷா, கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் அவர் அலறித்துடித்தார்.

பின்னர் தனது அத்தைக்கு தகவல் தெரிவிக்க இருவரும் சேர்ந்து, ஷோபானாவை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், வேதவல்லியின் மூத்த மகனே இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்துள்ளது. வேதவல்லியின் மூத்த மகன் பாபு, வேதவல்லி வசித்து வரும் வீடு தனக்கு வேண்டும் என தகராறு செய்து வந்துள்ளாா். அதேவேளையில் வேதவல்லி, தனது தம்பி மகள் ஷோபனா மீது அதிகளவு பாசத்துடன் இருந்ததால், வீடு தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் பாபு இருந்துள்ளாா்.

இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வந்து, உடல்நலம் குன்றிய தனது மாமன் மகள் என்றும் பாராமல், அவரை பல்வேறு இடங்களில் தான் கொண்டுவந்த கத்தி மூலம் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்மீது வழக்குப்பதிவுசெய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள பாபுவை தேடி வருகின்றனர். மேலும் சிறுமி ஷேபானாவுக்கு பாலியல் தொல்லை ஏதும் இருந்ததா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags : #MURDER #CHENNAI #ADAMBAKKAM #GIRL #YOUTH