‘தவறான நடத்தையைத் தட்டிக்கேட்ட தாய்’.. ‘ஆண் நண்பருடன் சேர்ந்து’.. ‘மகள் செய்த அதிரவைக்கும் காரியம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 29, 2019 07:53 PM

ஹைதராபாத்தில் ஆண்கள் பலருடன் பழகியதைத் தட்டிக்கேட்ட தாயை மகள் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hyderabad Woman Kills Mother for Objecting to Affair with men

ஹைதராபாத் துவாரகா காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதி ஸ்ரீனிவாஸ் - ரஜிதா. இவர்களுடைய மகள் கீர்த்தி (19). கடந்த ஒரு வாரம்  முன்பு வேலைக்குச் சென்ற லாரி டிரைவரான ஸ்ரீனிவாஸ் 24ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் மனைவி, மகள் இல்லாததால் கீர்த்திக்கு ஃபோன் செய்து கேட்டுள்ளார். அதற்கு அவர் தான் விசாகப்பட்டினத்தில் இருப்பதாகவும், தாய் எங்கே இருக்கிறார் எனத் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

பின்னர் இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று ரஞ்சிதாவைக் காணவில்லை எனப் புகார் கொடுத்துள்ளனர். அப்போது போலீஸார் கீர்த்தியிடம் விசாரணை நடத்தியபோது, “எனக்கு என் அப்பா மீது தான் சந்தேகம் உள்ளது. அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அம்மாவை அடித்துத் துன்புறுத்துவார். நான் கல்லூரிக்குச் சென்றபோது அப்பா தான் அம்மாவைக் கொலை செய்திருப்பார்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் ஸ்ரீனிவாசிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் தான் ஒரு வாரமாக வேலைக்குச் சென்றுவிட்டதாகக் கூறியதை நம்பி போலீஸார் அவர்களை அனுப்பியுள்ளனர்.

வீட்டுக்கு வந்ததும் கீர்த்தி விசாகப்பட்டினத்தில் இருந்ததாக சொன்ன சமயத்தில் அவர் வேறு ஒரு நண்பர் வீட்டில் இருந்தது ஸ்ரீனிவாசுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு கீர்த்தி மீது சந்தேகம் வர, உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் ரமணாப்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் இருந்து அழுகிய நிலையில் ரஞ்சிதாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீஸார் மீண்டும் கீர்த்தியிடம் விசாரிக்க அவர் தாயைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் கீர்த்திக்கு ஆண்கள் பலருடன் பழக்கம் இருந்ததும், அதைக் கண்டித்ததால் தன் ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து அவர் தாய் ரஜிதாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் இறந்த அவரது உடலை வீட்டிலேயே வைத்துக்கொண்டு இருந்த கீர்த்தி, கொலையைத் தற்கொலை போல மாற்ற சடலத்தை தண்டாவளத்தில் கொண்டுபோய்ப் போட்டுள்ளார். கொலை செய்ததை கீர்த்தி ஒப்புக்கொண்டதை அடுத்து கீர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் பால் ரெட்டி, ஷஷி ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Tags : #HYDERABAD #MOTHER #DAUGHTER #MURDER #SUICIDE #AFFAIR #MEN #LOVER #BOYFRIEND #FATHER