‘மயக்க ஸ்பிரே’ அடித்து பாட்டியை கொலை செய்த கொள்ளுப் பேரன்..! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 01, 2019 10:58 AM

மயக்க ஸ்பிரே அடித்து பாட்டியை கொள்ளுப் பேரன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

80 year old grandmother murdered by grandson in Vellore

வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தை சேர்ந்தவர் ராஜம்மாள் (80). கணவர் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை வேளையில் ராஜம்மாளின் வீட்டில் திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று பார்த்துள்ளனர். ஆனால் வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. அதனால் கதவை உடைத்து பார்த்த போது வீட்டினுள் இருந்து ஒருவர் வெளியே ஓடி வந்துள்ளார்.

அப்போது ராஜம்மாள் வீட்டுக்குள் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த சமயம் ராஜம்மாளின் கொள்ளுப் பேரன் மோனிஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவர் வீட்டுக்குள் இருந்துள்ளனர். இதனால் குழப்பமடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து மோனிஷ் மற்றும் அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதனால் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், பெங்களூரில் வசித்து வரும் மோனிஷிக்கு அவசரமாக பணத்தேவை ஏற்பட்டுள்ளது. அதனால் கொள்ளுப் பாட்டி ராஜம்மாளின் வீட்டில் பணம் இருப்பதை அறிந்து நண்பர்களுடன் சென்றுள்ளார். ராஜம்மாளின் முகத்தில் மயக்க ஸ்பேரே அடித்து பணத்தை கொள்ளையடிப்பதுதான் அவர்களது திட்டமாக இருந்துள்ளது. ஆனால் ராஜம்மாள் கூச்சலிட்டாதால், அவரை மோனிஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாட்டியை அடித்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  மோனிஷ் மற்றும் அவரது நண்பர் பிரிஷ்வால் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய வினய் என்ற நபரை தேடி வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #VELLORE #GRANDMOTHER #GRANDSON