‘அப்பாவோடு பழகுறத நிறுத்திக்கோ’... ‘இல்லேனா, நண்பனுடன் சேர்ந்து’... ‘சிறுவன் செய்த காரியத்தால்’... ‘பெண்ணுக்கு நேர்ந்த துயரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 02, 2020 11:32 AM

பட்டுக்கோட்டை அருகே தந்தையுடன் பழகி வந்தப் பெண்ணை, நண்பனுடன் சேர்ந்து 17 வயது சிறுவன் அடித்துக் கொண்ட சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman Murder case two boys arrested in Pattukottai

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மதுக்கூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 45 வயது மதிக்கத்தக்க விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் விவசாயிக்கும், அதேப் பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவருடன் வசித்து வந்த 47 வயதுடைய ஒரு பெண்ணுக்கும் இடையே நட்பு மலர்ந்து பின்னர் தவறான உறவு இருந்து வந்துள்ளது.

இதனால் குடும்பத்தில் பிரச்சனை நிலவ, விவசாயின் மகனான சிறுவன், தந்தையுடன் தவறாக பழகி வந்தப் பெண் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளான். சம்பவத்தன்று தனது நண்பருடன்,  தந்தையுடன் பழகி வந்த பெண் வீட்டுக்கு சென்றுள்ளான். அப்பொழுது தந்தையுடனான தவறான காதலை கைவிடும்படி அந்த பெண்ணிடம் சிறுவன் கேட்டுள்ளான். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிறுவன், நண்பருடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் அந்தப் பெண்ணை தலையில் சரமாரியாக அடித்து விட்டு இருவரும் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடந்த பெண்ணை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.