'ஸ்பெயினை துடைத்து எடுக்கும் துயரம்'... ‘ஒத்துழைக்காத மக்களால் நடக்கும் விபரீதம்’... ‘லாக் டவுனை நீக்கிய சீனாவை மிஞ்சிய கோரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 25, 2020 08:27 PM

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் 738  பேர் உயிரிழந்திருப்பது ஸ்பெயின் நாட்டினை நிலைகுலைய செய்த நிலையில், பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சி, இத்தாலியை நெருங்குகிறது.

Death toll in Spain overtakes China lockdowns extend around Globe

சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்திலும் வடுவை ஏற்படுத்திச் செல்கிறது. கொரோனா வைரசால் இத்தாலியில் 6,820 பேர் இறந்த நிலையில், அதற்கு அடுத்தப்படியாக ஐரோப்பாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான ஸ்பெயினில் ஒரே நாளில் 738 பேர் இறந்ததால் ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவைப் பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 3,281 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு புதிதாக கடந்த 5 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லாததால், ஹூபே மகாணத்தில் உகான் நகரத்தை தவிர இன்று முதல் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

ஆனால் ஸ்பெயினில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு விதித்த கட்டுப்பாடுகளையும், ஊரடங்கையும் அந்நாட்டு மக்கள் மீறி, சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இதனால் ஸ்பெயினில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் விபரீத நிலை உருவாகியுள்ளது.

மேலும் தலைநகர் மாட்ரிட்டில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டபோது, பல இல்லங்களில் முதியவர்கள் கவனிக்க ஆளில்லாமல் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில், ஊழியர்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றி கொள்வதற்காக கொஞ்சமும் மனிதாபம் இன்றி முதியவர்களை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதன் காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்து கிடந்த 12 முதியவர்கள் எவ்வித சிகிச்சையும் கிடைக்காமல் படுக்கையிலேயே தங்கள் உயிரை விட்டது தெரியவந்துள்ளது.

Tags : #KILLED #COVID-19 #CORONAVIRUS