'குடும்பத்தை பாக்க முடியல'... 'தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்'... தன்னை மறந்து செய்த கொடூர செயல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 28, 2020 01:09 PM

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞர் தனிமைப் படுத்தப்பட்ட நிலையில், சாலையில் அமர்ந்திருந்த மூதாட்டியின் கழுத்தைக் கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman was killed by the man who is staying in corona isolation ward

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் மிகப்பெரிய பாதிப்பைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய நோய்த்தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு நோய் குறித்த அறிகுறி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளார். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். குடும்பத்தைப் பார்க்க முடியாமல் அந்த இளைஞர் தனிமையிலிருந்ததால் மன ரீதியாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் இளைஞர் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து திடீரென சாலைக்கு ஓடிய அந்த இளைஞர் அங்கு அமர்ந்திருந்த மூதாட்டியின் கழுத்தைக் கடித்துக் குதறினார்.

இதனைப் பார்த்து அதிர்ந்த சாலையில் சென்ற நபர்கள், அந்த இளைஞரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்கள். இதையடுத்து அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியின் கழுத்தைக் கடித்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CORONA #CORONAVIRUS #MURDER #THENI #CORONA ISOLATION WARD