'மனைவியால், கணவருக்கு நிகழ்ந்த விபரீதம்'... ‘கொரோனா வைரஸ் பெயரை பயன்படுத்தி’... ‘பெண் கொடுத்த அதிர்ச்சி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 27, 2020 03:42 PM

புதுச்சேரியில் கணவரை கொலை செய்துவிட்டு, கொரோனா வந்து செத்துவிட்டதாக மனைவி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wife who killed husband told name of the corona Disease

பெங்களூரை சேர்ந்தவர் மஞ்சுநாதன்(49). இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பிழைப்பு தேடி வந்துள்ளார். புதுச்சேரியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்த மஞ்சுநாதனுக்கு, சத்யா (37) என்ற மனைவியும், இரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று காலை  11 மணிக்கு மஞ்சுநாதன் ரத்த காயங்களுடன் வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து, அவரது மனைவி வெளியே வந்து அவருக்கு பேய் பிடித்து விட்டது. கொரோனா நோய் வந்து, ரத்த வாந்தி எடுக்கிறார் என கத்தியுள்ளார்.

அப்போது நர்சிங் படிக்கும் அவரது மகள் சரளா ஆம்புலன்சை வரவழைத்து கதிர்காமம் அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர், மஞ்சுநாதன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சந்தேகத்தின்பேரில், மஞ்சுநாதன் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக வில்லியனூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது மஞ்சுநாதனின் மனைவி சத்யா முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். மஞ்சுநாதனை பேய் பிடித்து இருந்ததாகவும், பல நாட்கள் குடும்பத்தாரை அடித்து துன்புறுத்தியதால் மனநல மருத்துவர்கள், மாந்தீரிகம் செய்பவர்கள் என மாறி மாறி அழைத்து சென்று காண்பித்ததாகவும் கூறியுள்ளார். எனினும் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், குடிப்பழக்கம் கொண்ட மஞ்சுநாதன் ஊடரங்கு உத்தரவால், குடிக்க முடியாமல் மனநலம் பாதித்தபடி இருந்துள்ளார்.

நேற்று காலை மீண்டும் அவர் பேய் வந்தது போல் அட்டகாசம் செய்துள்ளார். இதனால் அவரை குடும்பத்தார் கை கால்களை கட்டியுள்ளனர். இதனையும் மீறி அவர், மனைவி மற்றும் மகள்களை தாக்கியுள்ளார். இதில் ஆவேசமடைந்த சத்யா கட்டையால் கணவரை தாக்கியுள்ளார். இதனால் சில நிமிடங்களில் மஞ்சுநாதன் இறந்துள்ளார். இந்த சம்பவத்தை மறைக்க, கணவருக்கு கொரோனா என மனைவி சத்யா நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : #CORONAVIRUS #MURDER #KILLED #PUDUCHERRY #HUSBAND #WIFE #PONDY