'நண்பனைக் காப்பாற்றும் முயற்சியில் சிறுவன்!'... தண்ணீர் குடிக்க சென்ற போது... சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!... கிராமத்தையே கலங்கடித்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 24, 2020 09:05 AM

வெள்ளியணை அருகே தண்ணீர் குடிக்க சென்றபோது பள்ளி மாணவர்கள் 2 பேர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

two kids drowned in well near karur village in sorrow

கரூர் மாவட்டம் மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி வெள்ளியணை அருகே உள்ள நத்தம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் நாயக்கர் மகன் நவீன்குமார்(வயது 15). அதேபகுதியை சேர்ந்த முத்தநாயக்கர் மகன் சத்தியராஜ்(வயது 14).

பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சிறுவர்கள் இருவரும் நேற்று காலை தங்கள் ஊரின் அருகே கள்ளபொம்மன்பட்டி பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் தாகம் எடுக்கவே இருவரும் அப்பகுதியிலிருந்த கிணற்றில் இறங்கி தண்ணீர் குடிக்க முயன்றனர். அந்த சமயம், எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் தவறி கிணற்றில் விழ, அவனைக் காப்பாற்றும் முயற்சியில் மற்றொரு சிறுவனும் கிணற்றில் இறங்கியபோது, 2 பேரும் நீரில் மூழ்கினர்.

இந்நிலையில், தண்ணீர் குடிக்க சென்ற மாணவர்கள் திரும்பி வராததால் அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சிலர் கிணற்றுக்கு சென்று பார்த்தனர். அங்கு மாணவர்கள் கிணற்றில் மூழ்கியது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் கிணற்றில் இறங்கி மாணவர்கள் 2 பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்து பார்த்தபோது அவர்கள் இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறையில் ஆடு, மாடு மேய்க்க சென்ற மாணவர்கள் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : #SCHOOLBOYDROWNS #KARUR #VILLAGE