‘அப்பா.. என்ன காப்பாத்துங்கன்னு கண்முன்னாடியே விழுந்தா’.. ‘கொஞ்ச நாள்ல அவளுக்கு 4வது பிறந்தநாள்’.. கண்கலங்க வைத்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 27, 2020 11:21 AM

குருத்துவாராவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் குடும்பத்தை இழந்த நபர் ஒருவர் உருக்கமாக பேசியுள்ளார்.

Three year old child, wife, father killed in Afghanistan terror attack

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலமான குருத்துவாரில் சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஹரிந்தர் என்பவர் தனது 3 வயது மகள் தன்யா, மனைவி மற்றும் தந்தை ஆகியோரை பரிதாபமாக பலியாகினர். அவரது தாய் மற்றும் உறவினர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தொலைபேசி வாயிலாக ஹரிந்தரை தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அதில், ‘இன்னும் சில நாட்களில் என் மகளுக்கு நான்காவது பிறந்தநாள் கொண்டாட இருந்தோம். அவள் கேக் வெட்ட வேண்டும் என கேட்டிருந்தாள். குருத்துவாராவில் எப்போதும் 6.30 மணிக்கு வழக்கமான வழிபாடு இருக்கும். அங்கு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர். பிரார்த்தனை நடந்துகொண்டிருக்கும்போதே சிலர் திருடர்கள் வந்துவிட்டதாக கூச்சலிட்டனர். அப்போது துப்பாக்கிகளுடன் வந்த நபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.

நான் மேடையில் நின்றுகொண்டு இருந்தேன். உடனே என் உறவினர்கள் என்னை கீழே உட்காரு எனக் கூச்சலிட்டனர். நான் கீழே அமர்ந்தபோது என் மனைவியும், மகளும் என் மீது அப்படியே சரிந்தனர். என் மகளின் தலையில் குண்டு துளைத்தது. அவள் கீழே விழும்போது, அப்பா என்னை காப்பாற்றுங்கள் என கதறிக்கொண்டே விழுந்தாள் (சில நொடிகள் ஹரிந்தர் கதறியழுதார்). என் மனைவி மற்றும் தந்தையின் மார்பில் குண்டுகள் துளைத்தன.

இந்த தாக்குதலில் மக்கள் பலர் தங்களது உறவினர்களை இழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது இங்கிருந்து வெளியேறவே விரும்புகின்றனர். இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் என்னுடையா நாடு என உணர்ந்தேன். ஆனால் இப்போது அப்படி நினைக்கவில்லை. நான் இங்கு வாழவே விரும்வில்லை. காயமடைந்துள்ள தாய், சகோதரர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு இந்த நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை’ என கண்கலங்க தெரிவித்துள்ளார்.

News Credits: TheIndianExpress

Tags : #ATTACKED #KILLED #AFGHANISTAN #TERRORATTACK #GURDWARA