கணவன்-மனைவி சண்டையால்... ஆட்டோ 'டிரைவருக்கு' நேர்ந்த விபரீதம்... சிகிச்சை பலனின்றி 'பலியான' துயரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 31, 2020 11:43 PM

கணவன்-மனைவி சண்டையை தடுக்க சென்ற ஆட்டோ டிரைவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Auto Driver Murdered in Chennai, Police Investigate!

சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் (27). ஆன்லைன் வழியாக உணவுப்பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜனனி. வினோத்-ஜனனி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். சமீபத்திலும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து ஜனனி கோபித்துக்கொண்டு தன்னுடைய தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து அவரை சமாதானம் செய்து அழைத்து வர வினோத் ஜனனியின் தந்தை வீட்டிற்கு கடந்த 27-ம் தேதி சென்றுள்ளார்.அப்போது மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த இவர்களது உறவினரும், ஆட்டோ டிரைவருமான மாரியப்பன்(58) என்பவர் சமாதானம் செய்ய சென்றுள்ளார்.

ஆனால் வினோத் அவரைத்தாக்கி இருக்கிறார். இதில் கீழே விழுந்த மாரியப்பன் காயமடைய அவரை சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்து போனார். இதையடுத்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் குமாரை கைது செய்தனர்.