‘கொரோனா பரவலை தடுக்கணும்’!.. ‘தேவையில்லாம யாரையும் வெளியே போகவிடமாட்டேன்’.. கையில் கட்டையுடன் இளம்பெண் எடுத்த அதிரடி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 31, 2020 05:05 PM

தனது கிராமத்தில் கொரோனா பரவாமல் தடுக்க ஊர் எல்லையில் இளம்பெண் ஒருவர் காவல் காக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Covid19 pandemic young woman guarding at entry point of Madanapuram

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மதனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா யாதவ் (23). பட்டதாரியான இவர் கிராம தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் தங்கள் கிராமத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, கையில் கட்டையுடன் ஊர் எல்லை காவல் காத்து வருகிறார். தேவையில்லாமல் யாரும் ஊருக்கு உள்ளே வராமலும், வெளியே செல்லாமலும் பார்த்துக் கொள்கிறார்.

இதுகுறித்து தெரிவித்த அகிலா, ‘ஆரம்பத்தில் லாக் டவுனை பொதுமக்கள் யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலர் கிராமத்தில் இருந்து தேவையில்லாமல் வெளியே செல்வதை காணமுடிந்தது. இதனால் கிராமத்தில் எல்லையில் தடுப்பு அமைத்து காவல் காக்க அங்கு அமர்ந்துகொண்டேன். ஊருக்கு உள்ளே வருபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்களிடம் என்ன காரணம்? எதற்காக செல்கிறீர்கள்? என கேட்பேன். அது தேவையான ஒன்றாக இருந்தால் மட்டுமே செல்ல அனுமதிப்பேன். இல்லையென்றால் அப்படியே திரும்பிப்போக அறிவுறுத்துகிறேன்.

நம்மை காத்துக்கொள்ள இதுதான் சரியான சமயம். நமது சொந்தங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். எனது கிராமத்தை பாதுகாக்க என்னால் முடிந்த சிறிய விஷயத்தை செய்கிறேன். யாராவது ஒருவருக்கு வந்துவிட்டால் ஒட்டுமொத்த கிராமத்தையும் பாதித்துவிடும்.

எங்கள் ஊருக்குள் புதிய வாகனமோ அல்லது புதிய முகங்களோ வருவது தெரிந்தால் அவர்களிடம் தீவிரமாக விசாரிப்பேன். குறிப்பாக நகரத்தில் இருந்து வருபவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன். பொதுமக்கள் வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகளை தெரிந்துகொள்ள வேண்டும். எங்கள் கிராமத்தில் 1600 பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு சுமார் 2000 முகக்கவசங்கள் விநியோகம் செய்துள்ளோம்’ என அகிலா தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #CORONAVIRUS #NALGONDA #COVID-19 #VILLAGE #WOMAN