'பாத்ரூம் போறேன்னு போன சிறுமி'...'மாடியிலிருந்து வீசப்பட்ட கொடூரம்'.... சென்னையை நடுங்க வைத்த கோரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 21, 2020 12:18 PM

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட அதே நாளில், சென்னையை அடுத்த மதுரவாயலில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, 3வது மாடியிலிருந்து வீசிக் கொலை செய்த கொடூரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : 10 year old girl Sexually Abused and killed

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் சென்னையில் பானி பூரி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு இவர் மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் தூங்கச் சென்றுள்ளார். அப்போது அவரது 10 வயது மகள், அப்பா பாத்ரூம் வருது, நான் போட்டு வரேன், எனக் கூறி வெளியில் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆன பின்பும் சிறுமி வீட்டிற்குத் திரும்பி வரவில்லை.

இதனால் பதறிப் போன அவரது பெற்றோர் வீட்டைச் சுற்றி சிறுமியைத் தேடிப் பார்த்துள்ளார்கள். இதையடுத்து சிறுமி காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். இந்த சூழ்நிலையில் சீனிவாசன் வீட்டில் மூன்றாவது மாடியின் பின்புறத்தில் சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளது. அங்குச் சென்று பார்த்தபோது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து சிறுமியை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுரேஷ் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, சுரேஷிடம் நடத்திய விசாரணையில், அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். சிறுமி காணாமல் போனதும், சுரேஸும் சிறுமியின் பெற்றோருடன் சேர்த்து சிறுமியைத் தேடியுள்ளான். இதற்கிடையே சிறுமியை நாசம் செய்த அந்த காமுகன், சிறுமி சத்தம் போட்டதால் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில், சிறுமியை 3வது மாடியிலிருந்து வீசி கொலை செய்த கொடூரத்தை ஒப்புக் கொண்டான்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட அதே நாளில் சென்னையில் நடந்துள்ள இந்த கொடூரம் சென்னை மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Tags : #SEXUALABUSE #KILLED #CHENNAI #10 YEAR OLD GIRL