குழந்தைகளை 'தவிக்கவிட்டு' காதலருடன் சென்ற இளம்பெண்... 8 ஆண்டுகளுக்கு பின் 'கொரோனா' பயத்தால் ஊர் திரும்பியபோது... 'தம்பியால்' நேர்ந்த விபரீதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலருடன் சென்ற பெண் 8 ஆண்டுகளுக்கு பின் ஊர் திரும்பியபோது தம்பியால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிந்துபட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி(40) இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செல்விக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இது கள்ளக்காதலாக உருவெடுத்தது. இதையடுத்து இருவரும் ஊரைவிட்டு சென்று திருப்பூரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இருவரும் சொந்த ஊரான மதுரைக்கு திரும்பியுள்ளனர். நேற்று அதிகாலையில் முருகன் வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் சிலர் முருகன், செல்வி இருவரையும் சரமாரியாக அரிவாளால் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே செல்வி இறந்து விட்டார்.
தற்போது முருகன் தீவிர வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் செல்வியின் சித்தி மகனான அருண் தன்னுடைய உறவினர்கள் சிலருடன் சேர்ந்து செல்வியை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அருணை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். 8 ஆண்டுகளுக்கு பின் ஊர் திரும்பிய அக்காவை தம்பி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
