'ஊரே கொரோனா பயத்துல இருந்துச்சு... 'தம்பியோடு சேர்ந்து போதையான அண்ணன்'... அடுத்தடுத்து நடந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 23, 2020 11:10 AM

கொரோனாவின் பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், தம்பியோடு சேர்ந்து மது குடித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Madurai : Drunken Brother who died one after the other

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் யூனியன் அலுவலகம் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன்கள் சிவகுமார் மற்றும் வினோத்குமார். இருவரும் நேற்று முன்தினம் தங்களது நண்பரான தங்கப்பாண்டி என்பவருடன் சேர்ந்து மது குடிக்க திட்டமிட்டுள்ளார்கள். இதையடுத்து மூவரும் சேர்ந்து மது குடித்துள்ளார்கள். இதையடுத்து மது குடித்த சிறிது நேரத்திலேயே மூவரும் மயங்கி விழுந்துள்ளார்கள். இதனை கவனித்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சிவகுமார் இறந்தார். இதற்கிடையே அண்ணன் சிவகுமார் இறந்த சில மணி நேரங்களிலேயே தம்பி வினோத்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களது நண்பர் தங்கப்பாண்டியை ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மது குடித்த அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதனால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்பது புரியாத புதிராக இருந்த நிலையில், சிவகுமார், வினோத்குமார் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் சாப்பிட்ட உணவு, அவர்கள் குடித்த மது ஆகியவற்றில் ஏதோ விஷமாகி அவர்கள் 2 பேர் உயிரைகுடித்து இருக்கலாம்  என போலீசார் கூறியுள்ளார்கள். அதே நேரத்தில் விஷம் கலந்த மதுவை குடித்தார்களா? என்ற கோணத்திலும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

பலியான சிவகுமாருக்கு விவேகாதேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஒரு நேரத்தில் அண்ணன் மற்றும் தம்பி உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KILLED #MADURAI #DRUNKEN BROTHER