‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ MEME-களுக்கு பதிலடி..! லட்சுமி ராமகிருஷ்ணனின் புத்தம் புது நிகழ்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 23, 2019 11:56 PM

இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்ற புதிய நிகழ்ச்சியை Behindwoods Air சேனலில் தொகுத்து வழங்க உள்ளார்.

Lakshmy Ramakrishnan\'s new reality show on Behindwoods Air

‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சியின் மூலம் கேலி கிண்டல்களை சந்தித்த அவர், அவற்றை தவிடு பொடியாக்கி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். குணச்சித்திர வேடமாக இருந்தாலும், அம்மா வேடமாக இருந்தாலும் தனது யதார்த்த நடிப்பால் அசத்துபவர்.

நடிப்பு மட்டுமல்லாது அம்மணி, நெருங்கி வா முத்தமிடாதே, ஆரோகணம், ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்ற புதிய நிகழ்ச்சியை Behindwoods Air சேனலில் தொகுத்து வழங்க உள்ளார்.

Tags : #BEHINDWOODSEXCLUSIVE #LAKSHMYRAMAKRISHNAN #REALITYSHOW #NVEN