‘திடீரென பற்றிய தீ’.. வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..! அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 01, 2019 05:04 PM

கூறை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டுக்குள் சமைத்துக் கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Woman dies after house fire accident in Nagapattinam

நாகை மாவட்டம் பட்டமங்கலம் அருகே உள்ள கீழப்பட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுகுணாதேவி. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து, தந்தை முனுசாமியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். சுகுணாதேவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு சமைப்பதற்காக வீட்டில் அடுப்பை சுகுணாதேவி பற்ற வைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் கூறையின் மீது தீ பற்றியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகுணாதேவி சத்தம் போட்டுள்ளார். தீ எரிவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை வேகமாக அணைத்துள்ளனர். ஆனால் சுகுணாதேவி தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #FIREACCIDENT #WOMAN #DIES #NAGAPATTINAM