'அமைதியா போனா பலவீனமா?'.. 'பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த அனுஷ்கா'.. 'மன்னிப்பு கேட்ட ஃபரூக்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Nov 01, 2019 04:47 PM

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுக்கு, உலகக்கோப்பை போட்டியின்போது இந்திய தேர்வுக் குழுவினர் டீ கொடுத்ததை விமர்சித்த முன்னாள் வீரர் ஃபரூக் இன்ஜினியரின் பேச்சு சர்ச்சையானது.

Farokh Engineer apologised to anushka sharma for his comment

இதற்கு அனுஷ்காவும் தனது தரப்பில் இருந்து முதல் முறையாக மவுனத்தை உடைத்து காட்டமான மறுகருத்தினை வெளியிட்டிருந்தார். அதன்படி, தன் மீதான விமர்சனங்களை மவுனமாகக் கடந்துவந்ததாகவும் தவிர, ஒரே ஒரு போட்டியைத்தான் நேரில் வந்து பார்த்ததாகவும், அதையும் தேர்வாளர்கள் அறையில் இருந்து பார்க்கவில்லை, மாறாக பார்வையாளர்களின் குடும்பங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்துதான் பார்த்ததாகவும், தேர்வாளர்களை விமர்சிக்க தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்றும் அமைதியை பலவீனமாகக் கருத வேண்டாம் என்றும் கூறி கடித்துவிட்டார்.

கடைசியாக,  ‘நான் டீ குடிக்கல. குடிச்சது காபிதான்’ என்றும் கூறி பதில்களை பறக்கவிட்டிருந்தார். அனுஷ்காவின் இந்த காரசாரமான பதிலுக்கு பின்னர் தற்போது ஃபரூக் இன்ஜினியர் அனுஷ்காவை தரம் தாழ்த்திப் பேசுவது தனது நோக்கமாக இருக்கவில்லை எனக்கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.

Tags : #VIRATKOHLI #ANUSHKASHARMA #FAROKHENGINEER