‘தீபாவளிக்கு சென்ற தம்பதி’.. ‘காவு வாங்கிய பள்ளம்' கணவர் கண்முன்னே பலியான மனைவி..! சென்னையில் மற்றொரு சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 25, 2019 09:57 AM

சென்னையில் சாலையில் இருந்த பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai woman dies in road accident in front of husband in Poonamallee

சென்னை பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியைச் சேர்ந்தவர்கள் ராமதாஸ் (40)-தேவி (35) தம்பதியினர். ராமதாஸ் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்துள்ளனர். நசரத்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையில் இருந்த பள்ளம் மழைநீரினால் நிரம்பியிருந்ததை அறியாமல் ராமதாஸ் சென்றுள்ளார்.

இதனால் இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளனர். அப்போது பின்னே வந்த கண்டெய்னர் லாரி தேவியின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமதாஸ் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இப்பகுதியில் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் இதுவரை மூன்று விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், அதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபத்தில் பேனர் விழுந்ததால் லாரி மோதி இளம்பெண் பலியான நிலையில், சாலையில் இருந்த பள்ளத்தால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்ற போது கணவர் கண் முன்னே மனைவி பலியான சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #ACCIDENT #CHENNAI #HUSBAND #WIFE #DIES