‘சுமார் 4 கிமீ’.. ‘ஒருத்தரும் உதவிக்கு வரல’.. உயிருக்கு போராடியவரை தள்ளுவண்டியில் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்ற அவலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 01, 2019 01:09 PM

உடல்நிலை பாதிக்கப்பட்டவரை தள்ளுவண்டியில் இழுத்து சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Oldman dies as no nearby came for his help to visit hospital

விழுப்புரம் மாவட்டம் வானுர் அருகே உள்ள ஒழிந்தியாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகா. இவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மல்லிகாவை பார்ப்பதற்காக தங்கை பவுனு (60) மற்றும் அவரது கணவர் சுப்ரமணி (65) சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராதவிதமாக சுப்ரமணிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகன வசதி இல்லாததாலும், ஆம்புலன்ஸை அழைக்க செல்போனும் இல்லாததாலும் செய்வதறியாமல் நின்றுள்ளனர். பின்னர் செங்கலை கொண்டு செல்லும் தள்ளுவண்டியில் சுப்ரமணியை ஏற்றிக்கொண்டு மருத்துமனைக்கு சென்றுள்ளனர். சுமார் 4 கிமீ தள்ளுவண்டியை இழுத்துக்கொண்டே மருத்துவமனை சென்றுள்ளனர். அங்கு சுப்ரமணியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சுப்ரமணியின் உடலை ஊருக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதியை கேட்டுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் ஆம்புலன்ஸ் வசிதியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். படிப்பறிவு இல்லாததால் சரியான ஆலோசனைகூட கேட்க முடியாமல் தவித்தவர்களுக்கு, ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு கூட தகவல் தெரிவிக்காமல் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடுவது வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #OLDMAN #PUDUCHERRY #DIES #HOSPITAL