‘தீபாவளி முடிந்து ஊருக்கு திரும்பிய இளைஞர்’ ‘குறுக்கே வந்த மான்’.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..! கோவை அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 30, 2019 11:58 AM

தீபாவளி முடிந்து ஊருக்கு திரும்பிய இளைஞரின் இருசக்கர வாகனத்தில் மான் மோதியதில் இளைஞர் மற்றும் மான் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore man died in road accident near Azhiyar Kurangu aruvi

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (29). இவர் தனது நண்பர் முத்துக்குமார் என்பவருடன் தீபாவளி விடுமுறைக்காக இரு சக்கர வாகனத்தில் வால்பாறைக்கு சென்றுள்ளார். தீபாவளி முடிந்து இருவரும் நேற்று (29.10.2019) வால்பாறையில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ளனர். ஆழியாறு குரங்கு அருவி அருகே வந்து கொண்டிருந்தபோது கடமான் ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக மான் மீது இருசக்கர வாகனம் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முத்துக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், இருசக்கரம் மோதி உயிருக்கு போராடி கொண்டிருந்த மானை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் பலத்த காயம் அடைந்ததால் சிறிது நேரத்திலேயே மான் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தீபாவளி முடிந்து ஊருக்கு திரும்பும் வழியில் இருசக்கர வாகனத்தில் மான் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞரும், மானும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Photo Credits: Vikatan

Tags : #CRIME #ACCIDENT #COIMBATORE #MAN #DIES #DEER