மீண்டும் 'பற்றி எரிந்த சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை' .. தீ விபத்தால் கோடிக்கணக்கில் இழப்பா?!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 30, 2019 11:12 AM

திருநெல்வேலி அருகே உள்ள கோவில்பட்டியில் இயங்கிவந்த பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தால் ஜவுளிக்கடை பற்றி எரிந்தது.

fire accident in kovilpatti textile show room in morning

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த 3 தீயணைப்பு வண்டிகளில் இறங்கி வீரர்கள், உடனடியாக செயல்பட்டு ஜவுளிக்கடையில் பற்றி எரிந்த தீயினை அணைக்கப் போராடினர்.

எனினும் சுமார் ரூபாய் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் தீயில் பொசுங்கி நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது.  திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இதனையடுத்து, இந்த தீவிபத்து சம்பவத்தில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை தி.நகரில் இயங்கிவந்த சென்னை சில்க்ஸ் கடையில் இப்படியான தீவிபத்து உண்டானது குறிப்பிடத்தக்கது.